• October 25, 2026

மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மண்சரிவு; 150-க்கும் மேற்பட்ட கேரள மாணவர்கள் மீட்பு

 மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மண்சரிவு; 150-க்கும் மேற்பட்ட கேரள மாணவர்கள் மீட்பு

கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் 

மற்றும் ஊட்டி இடையே பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மலை ரெயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதேபோன்று, மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் 14 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், இரு சாலைகளிலும் போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. இதனையடுத்து, சாலைகளை சீரமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் – ஊட்டி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதில், சுற்றுலாவாசிகள் சிலர் சிக்கி கொண்டனர். கேரளாவில் 

150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மண்சரிவில் சிக்கியிருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு சென்றனர். மண்சரிந்த பகுதியில் சிக்கியிருந்த மாணவர்களை கயிறு கட்டி மீட்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *