• October 24, 2026

தென் மண்டல ஆக்கி போட்டி: தமிழக சப் ஜூனியர்  பெண்கள்  அணி தேர்வு 

 தென் மண்டல ஆக்கி போட்டி: தமிழக சப் ஜூனியர்  பெண்கள்  அணி தேர்வு 

Oplus_16908288

தென்மண்டல சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் பெண்கள் ஆக்கி போட்டி காக்கிநாடாவில் வருகிற 27ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது இப்போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, தெலுங்கானா, ஆகிய மாநிலங்கள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன.

இப் போட்டியில்  பங்கேற்கும் தமிழக அணிக்கான சப் ஜூனியர்  பெண்கள் ஆக்கி அணி தேர்வு கடந்த இரண்டு நாட்களாக கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நடந்து வந்தன. இந்த தேர்வில் சப் ஜூனியர் பெண்கள் பிரிவில் 140க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.

ஆக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே. மனோகரன் பொதுச் செயலாளர்  செந்தில் ராஜ்குமார், தேர்வு குழு தலைவர் குரு சித்திர சண்முக பாரதி  தேர்வு குழுவினர்கள் முத்துக்குமார், அஸ்வின், சந்தியா, ராஜா, ஆகியோர் தேர்வு செய்த வீராங்கனைகளை அறிவித்தனர் தேர்வு செய்யப்பட்ட தமிழக சப் ஜூனியர் அணி விவரம் வருமாறு கோல்கீப்பர் -தீபிகா, தேஜாஸ்ரீ, 

தடுப்பு ஆட்டக்காரர்கள் பிரதீபா , அம்சக்கனி, தீபிகா, செலினா, 

ஹேமா மாலினி, மதுமிதா, கனிமொழி, மதுஸ்ரீ, சுதர்ஷினி , நிக்ஸிதா 

முன் கள ஆட்டக்காரர்கள் -ஜெயஸ்ரீ, தீபிகா ராணி, ராஜஸ்ரீ, 

மதுமிதா, சுவாதி, மகாலட்சுமி. தமிழக சப்ஜனியர் பெண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளராக வேல்முருகன், மேலாளராக  பிரதிக் ஷா ஆகியோர் செயல்படுகிறார்கள்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *