• October 25, 2026

குடிபோதை தகராறில் தம்பியை கொன்ற அண்ணன்

 குடிபோதை தகராறில் தம்பியை கொன்ற அண்ணன்

Oplus_16908288

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் 2வது கைலாபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் ராமன் என்ற ராபின். இவரது மகன்கள் இஸ்ரவேல் (50) மற்றும் சாமுவேல் (45). 

இவர்கள் இருவரும் சமையல் மாஸ்டர்களாக வேலை பார்த்து வந்தனர். இருவரும் மதுபோதைக்கு அடிமையானவர்கள் என்பதால், இவர்களது மனைவிகள் அவர்களை பிரிந்து சென்றுவிட்டனர்.

இந்நிலையில், நேற்று இரவு மதுபோதையில் இருந்த இஸ்ரவேல் மற்றும் சாமுவேல் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இஸ்ரவேல், சாமுவேலைக் கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த சாமுவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைக் கண்ட இஸ்ரவேல், வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்துச் சாமுவேலின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இஸ்ரவேலை போலீசார்  தேடி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *