• October 25, 2026

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் மறுசீரமைப்பு கூட்டம் மாணிக்கம் தாகூர் எம்பி பங்கேற்பு

 தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் மறுசீரமைப்பு கூட்டம் மாணிக்கம் தாகூர் எம்பி பங்கேற்பு

தூத்துக்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்டப் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பு மறுசீரமைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல், வடக்கு மாவட்டத்தின் மறுசீரமைப்பு அமைப்பின் பொறுப்பாளர் பூவை ஜேம்ஸ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நெடுஞ்செழியன், சிவராமன், தணிகாச்சலம் மற்றும் கனெக்ட் சென்டர் இணைத் தலைவர். பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ராணி வெங்கடேஷன், பொதுக்குழு உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை உள்பட பலா் கலந்து கொண்டார்கள்

கட்சி அமைப்பை மறுசீரமைக்கும் பணிகளைத் திறம்பட ஒருங்கிணைப்பது மற்றும் மாவட்ட அளவில் கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *