• October 26, 2026

கோவில்பட்டி கண் பரிசோதனை முகாமில் 70 பேர் பங்கேற்பு

 கோவில்பட்டி கண் பரிசோதனை முகாமில் 70 பேர் பங்கேற்பு

Oplus_16908288

கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி   1974-1977  ஆண்டு பழைய மாணவர் சங்கம், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம்,  அரவிந்த் கண் மருத்துவமனன இணைந்து மாதம் தோறும் நான்காவது ஞாயிறுதோறும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி வருகிறார்கள். 

அக்டோபர் மாத கடைசி  ஞாயிறு அன்று  25-10-2026    கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை  தொழிலதிபர் என்.ராஜவேல்  தலைமையில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் முத்து கிருஷ்ணன், ராஜேந்திரன், பாலசுப்ரமணியன்,ராஜேந்திரன், அருள்ஜான், ஜான் ஜெயபிரகாஷ், அருள் ஜான், தங்கமாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் நடைபெற்றது. முகாமில் 70 நோயாளிகள்ப கலந்து கொண்டு கண் பரிசோதனைகள் மேற்கொண்டனர். இவர்களில் கண்புரை இலவச    அறுவை சிகிச்சைக்கு 8 பேர் தேர்வு செய்யப்பட்டு அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 அங்கு அவர்களுக்கு இலவசமாக கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கண்ணாடிகள் வழங்கப்படுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *