தமிழகத்தில் இடி, மின்னலுக்கு 14 பேர் பலி ; அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் மீட்புப் பணிகள் குறித்து, சென்னையில் அவசரகால செயல்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
தமிழகத்தில் இடி, மின்னல் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் கனமழையால் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரு.ம்பியது.
நீலகிரி மண் சரிவில் சிக்கி உயிரிழந்த டிரைவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. நீலகிரி, கொடைக்கானல்,
ஏற்காடு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
முதல்-அமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி பருவமழைமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயிர்ச் சேதம் குறித்து மழைக்காலம் முடிந்த பிறகு கணக்கிடப்படும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்







