கோவில்பட்டியில் சர்வதேச போலியோ விழிப்புணர்வு கருத்தரங்கு
கோவில்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரியில் சர்வதேச போலியோ விழிப்புணர்வு தின கருத்தரங்கு நடைபெற்றது.
300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் உரிய வயதில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மாணவிகளுக்கு விழிப்புணர்வு வால்போஸ்டர்கள் வழங்கப்பட்டது. போலியோ தொடர்பான கேள்வி பதில்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவிகள் போலியோ குறித்த விழிப்புணர்வு ரங்கோலி கோலம் வரைந்தனர்.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கதலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார், ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர்கள் சீனிவாசன், பாபு, ஜெயபிரகாஷ் நாராயண சாமி,முத்துச்செல்வம்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் சாந்திப்பிரியா அனைவரையும் வரவேற்றார்.பரமக்குடி ரோட்டரி சங்க தலைவர் ஜெபின் ஜோஸ் போலியோ விழிப்புணர்வு தின நோக்க உரையாற்றினர்.
ஸ்ரீ ராம் நகர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் உமாதேவி , உலக போலியோ விழிப்புணர்வு தின வால்போஸ்டர்கள் மற்றும் பரிசுகளை மாணவிகளுக்கு வழங்கி பேசினார். முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்







