திட்டங்குளம் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை

கோவில்பட்டி திட்டங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகம் (தனியார் தினசசி சந்தை) செயல்பட்டு வருகிறது. அதிகாலையில் வெளியூர்களில் இருந்து லாரிகளில் காய்கரிகரிகள் உள்ளிட்ட பொருட்கள் வந்து இறங்கும்,.
மொத்த கடைக்காரார்கள் அவற்றை இறக்கி வைத்து சில்லறை வியாபாரிகளுக்கு விறபனை செய்வார்கள்/ கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வியாபாரிகள் திட்டனக்குளம் சந்தைக்கு வந்து காய்கறிகள் வாங்கி செல்வார்கள்./
இதனால் இரவிலேயே சுமை தூக்கும் தொழிலாளர்கள் சந்தைக்கு வந்து தங்கி இருப்பார்கள். அது போல் சுமை தூக்கும் தொழிலாளிகள் காளிராஜ்(வயது 42) மற்றும் சின்னத்துரை (40) ஆகியோர் திட்டங்குளம் தினசரி சந்தையில் நேற்று இரவில் தங்கினர்.

இன்று (27-10-2026) அதிகாலை தூங்கிக்கொண்டிருந்தபோது காளிராஜை சின்னத்துரை , கோடரியால் சரமாரி வெட்டினார். தூங்கிய காளிராஜ அலறி துடித்து எழுந்த நிலையில் தப்பிக்க முடியாமல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து போனார்.
இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து , சின்னத்துரை கொப்பம்பட்டி போலீஸ் நிலையம் சென்று கொலை பற்றிய விவரத்தை சொல்லி சரணடைந்தார். உருவ கேலி செய்ததால் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்ட காளிராஜ் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது,.
கொலை செய்யப்பட்ட காளிராசுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்,







