• October 27, 2026

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி திட்டத்தின் முதல் அணிக்கான பயிற்சி முகாம்; மாமல்லபுரத்தில் தொடங்கியது

 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி திட்டத்தின் முதல் அணிக்கான பயிற்சி முகாம்; மாமல்லபுரத்தில் தொடங்கியது

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, இன்று (27.10.2026) செவ்வாய்க்கிழமை, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் ஜே/.சி,.டி,.பிரபாகர் முன்னெடுப்பில், சட்டமன்ற உறுப்பினர்களின் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்தின் முதல் அணிக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் தொடங்கியது.

இந்நிகழ்வில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர்  என்.ஆனந்த் பங்கேற்றார்.! இரண்டு நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமில், முதல் அணி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, மக்கள் நலன் சார்ந்த நிர்வாகம், சட்டமன்றப் பொறுப்புகள், பொதுச் சேவையில் தலைமைத்துவம், தொகுதி மேம்பாட்டுப் பணிகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி பெறுகின்றனர்.

மேலும், அரசின் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல், பொதுமக்களின் தேவைகளை அறிந்து திட்டமிடுதல், பொறுப்புணர்வுடன் மக்கள் பணியாற்றுதல் மற்றும் தொகுதியின் வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்தும் இப்பயிற்சியில் எடுத்துரைக்கப்படுகின்றன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தி, மக்கள் நலனை மையமாகக் கொண்ட சிறந்த நிர்வாகத்தை உருவாக்குவதற்கும், சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்திறனை வலுப்படுத்துவதற்கும் இத்திட்டம் முக்கியப் பங்காற்றும்.

இந்நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் என்..ஆனந்த் பேசியதாவது, “

தலைமைத்துவம் என்பது ஒரு பதவியோ அல்லது அதிகாரமோ அல்ல; அது ஒரு பொறுப்பு. மற்றவர்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமே தலைமைத்துவம் அல்ல; மாறாக, மற்றவர்களை ஊக்குவித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து, அவர்களை வளர்ப்பதே உண்மையான தலைமைத்துவம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாம், மக்கள் நலனையும் தொகுதி வளர்ச்சியையும் முன்னிறுத்தி, பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மக்களுக்குப் பணியாற்றுவதும், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும் நமது முதன்மையான கடமையாகும். சேவை மனப்பான்மையுடன் கூடிய தலைமைத்துவமே உண்மையான தலைமைத்துவம்.

இதைத்தான் நமது முதலமைச்சர் தமது செயல்பாடுகள் மூலம் நமக்குக் கற்றுத் தந்துள்ளார். அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதுடன், பொதுமக்களின் தேவைகளை அறிந்து, அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படுவது ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியின் முக்கியப் பொறுப்பாகும்.

மேலும், செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் ஆளுகை மற்றும் தரவு அடிப்படையிலான முடிவெடுத்தல் போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அரசின் நிர்வாகத் திறனையும் பொதுச் சேவையின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும். இந்த இரண்டு நாள் பயிற்சி முகாம், மக்கள் பணியில் நமது திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும், புதிய அணுகுமுறைகளைக் கற்றுக்கொள்ளவும், சிறந்த மக்கள் பிரதிநிதிகளாகச் செயல்படவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆனந்த் பேசினார்.
. இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் .மு.ரவிசங்கர் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்.ஆதவ் அர்ஜுனா சட்டமன்ற அரசு தலைமை கொறடா .சபரிநாதன் மேகாலயா அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் & வளர்ச்சி ஆணையர் டாக்டர் சம்பத் குமார், , தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் ஆர்.சாந்தி , தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூடுதல் செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர் பி. தேன்மொழி, ஓய்வுபெற்ற நீதியரசர் .கே.சந்துரு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *