• October 27, 2026

பெண்கள் காப்பகத்தில் உலக மனநல நாள் கொண்டாட்டம்

 பெண்கள் காப்பகத்தில் உலக மனநல நாள் கொண்டாட்டம்

கோவில்பட்டியை அடுத்த முடுக்குமீண்டான்பட்டி கிராமத்தில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் நடத்தும் பெண்கள் மனநல காப்பகத்தில் மனநல சீராய்வு குழுமம் திருநெல்வேலி சார்பில் இன்று உலக மனநல நாள் கொண்டாடப்பட்டது.

காப்பக நிர்வாகி தேன்ராஜா அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக மனநல சீராய்வு குழுமம் தலைவரும், மாவட்ட நீதிபதி(பணி நிறைவு) கிங்ஸ்லி கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்;

மனநலம் குறித்து கிங்ஸ்லி கிறிஸ்டோபர் சிறப்புரையாற்றி, விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தும்,போட்டியில் வென்றவருக்கு பரிசுகளும் வழங்கினார். பியூலா கிங்ஸ்லி கிறிஸ்டோபர், மனநல சீராய்வு குழுமம் உறுப்பினர் மேரி பீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மனநல காப்பகத்தில் உள்ள பெண்களுக்கு  மியூசிகல் சேர், இடுப்பில் பலூன் கட்டி உடைத்தல்,பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், நடனம் பாட்டு போட்டிகள் போன்ற பலவகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன,

நிகழ்வில் செவிலியர் சத்தி(எ)சத்தீஸ்வரி, தொழில்பயிற்சியாளர் முத்துலட்சுமி  மற்றும் பலர் கலந்து கொண்டார். சமூகப் பணியாளர் ருக்மணி பிரியா நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *