• April 30, 2024

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் சொத்துகளை முடக்குவது பற்றி போலீசாருக்கு அமலாக்க துறை அதிகாரி ஆலோசனை

 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் சொத்துகளை முடக்குவது பற்றி  போலீசாருக்கு அமலாக்க துறை அதிகாரி ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருள் கடத்தல், கந்துவட்டி, கொள்ளை மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகளின் சொத்தை சட்டப்படி முடக்குவது எப்படி என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் இந்த் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மதுரை மண்டல அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் நந்தினி கலந்து கொண்டு சட்டப்படி சொத்துக்களை முடக்குவது குறித்து சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரகாஷ்பாபு, தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ், காவல் துணை கண்காணிப்பாளர்கள் சத்தியராஜ்(தூத்துக்குடி நகரம்), ஆவுடையப்பன்(திருச்செந்தூர்) , அருள்(சாத்தான்குளம் ), மாயவன்(ஸ்ரீவைகுண்டம் ), பிரகாஷ்(விளாத்திக்குளம் ), சங்கர்(மணியாச்சி ), வெங்கடேஷ்(கோவில்பட்டி), மாவட்ட குற்றப்பிரிவு ஜெயராம், மாவட்ட குற்ற ஆவண காப்பகம் பிரேமானந்தன், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிவசுப்பு, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *