பணிஒய்வு பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு விழா
கோவில்பட்டியில் பணிஒய்வு பெற்ற ஆசிரியைக்கு வசந்திக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கோவில்பட்டி சேகர கவுரரவகுரு அருட்திரு இம்மானுவேல் தலைமை தாங்கினார், அருளானந்தம் முன்னிலை வகித்தார். சபை ஊழியர் பாஸ்கர் வரவேற்றார். நாடார் மேல்நிலைப் பள்ளி செயலாளர் ரத்தினராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மைக்ரோபாய்ண்ட் கல்வி நிறுவன முதல்வர் ஆர்ம்ஸ்டிராங் , நாகலாபுரம் டிடிடிஏ பள்ளி தாளாளர் ராஜபாண்டியன், வழக்கறிஞர் ஆண்ட்ரூஸ் , செல்வின் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் ஆசிரியை வசந்தி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஜெம்சன் ஜெபராஜ், கென்னடி, மார்ட்டின், ஜெமி ஜெர்சன் , ஜெசி கிளாட்வின் , சியாமளா, ராஜேந்திர சிங் ஆகியோர் செய்திருந்தனர்.








