• March 6, 2026

நாகலாபுரம் டி. டி. டி. ஏ. உயர்நிலைப் பள்ளி தாளாளராக அ . ராஜபாண்டியன் பதவி ஏற்பு 

 நாகலாபுரம் டி. டி. டி. ஏ. உயர்நிலைப் பள்ளி தாளாளராக அ . ராஜபாண்டியன் பதவி ஏற்பு 

Oplus_16908288

கோவில்பட்டி அருகே உள்ள நாகலாபுரம் டி. டி. டி. ஏ.உயர்நிலைப் பள்ளியின் தாளாளராக கோவில்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ( பணி நிறைவு ) அ. ராஜபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். 

சி. எஸ். ஐ.தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாளரும் ,  திருமண்டல மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளருமான  எஸ். டி. கே. ராஜன் மற்றும் திருமண்டல மூத்த செயற்குழு உறுப்பினர் – ஆடிட்டர் ஜெபச்சந்திரன் ஆகியோர் இந்த நியமனத்தை செய்து உள்ளனர்.

இதை தொடர்ந்து நாகலாபுரம் உயர்நிலைப் பள்ளி தாளாளராக அ.. ராஜபாண்டியன் பதவி எற்றார்.

சி. எஸ். ஐ.தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே நிர்வாக கமிட்டி உறுப்பினர்  இஸ்ரேல் ஞானராஜ், திருமண்டல நீதிமன்ற இயக்குநர் வக்கீல் டி. ஆண்ட்ரூஸ் சாம்ராஜ் ,உறுப்பினர் வக்கீல் வி.செல்வின் ராஜ்குமார்கே.கைலாசபுரம் டி. டி. டி. ஏ. உயர்நிலை பள்ளி தாளாளர்  ஜி.டேவிட், குருவார்பட்டி  பாஸ்கர், நாகலாபுரம் பள்ளியின் தலைமை ஆசிரியர் அகஸ்டின், மற்றும் கோவில்பட்டி சேகர எஸ். டி. கே.குழுவினர்  நிகழ்ச்சியில் பங்கேற்று அ. ராஜபாண்டியனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *