• March 6, 2026

பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் ஆலை தொடங்க அனுமதிக்க கூடாது ; தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல் 

 பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் ஆலை தொடங்க அனுமதிக்க கூடாது ; தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல் 

தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் கோவில்பட்டி என். ராஜவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-

பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் ஆக்கிரமிப்பினால் தீப்பெட்டி விற்பனை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.  இந்த தீப்பெட்டி தொழில் 103 வருடம் பாரம்பரியமிக்கது.  இதில் நேரடியாகவும் , மறைமுகமாகவும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள்.

‌தற்பொழுது சிவகாசி தீப்பெட்டி தொழில் முன்னோடிகள் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் ஆலை தொடங்குவதால்  தீப்பெட்டி உற்பத்தி மற்றும் விற்பனை அடியோடு நின்றுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 இதனால் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பதோடு அவரது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.  இந்நிலை ஏற்படாமல் தடுக்கும் தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளோம்.

தமிழக அரசையும், மத்திய அரசையும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்  தயாரிக்கவோ, வாங்கவோ, விற்கவோ அனுமதிக்க கூடாது என்று தடை விதிக்க முயற்சி செய்து வருகிறோம்.

இவ்வாறு என். ராஜவேல் கூறி உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *