கோவில்பட்டி நகராட்சி பள்ளி மாணவிகள்,கபடி போட்டியில் சாதனை
தமிழ் நாடு அரசு, பள்ளி கல்வித்துறை சார்பில் கோவில்பட்டி வட்டார அளவிலான மாணவிகளுக்கான கபடி போட்டி கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் பள்ளியில் நேற்று 22 ஆம் தேதிநடைபெற்றது.

இப்போட்டியில் 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் தொடர்ந்து கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி அணி மாணவிகள்தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளனர்.
இறுதிப் போட்டியில் காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி 36 புள்ளிகளும் எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி 16 புள்ளிகளும் எடுத்தனர்.

வெற்றி பெற்ற நகராட்சி பள்ளி வீராங்கனைகளை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ,உடற்கல்வி ஆசிரியர் கரிகாலன் மற்றும் மாணவ மாணவிகள் பாராட்டினர்.







