கழுகுமலையில் இலவச கண் சிகிச்சை முகாம்
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் கழுகுமலை செங்குந்தர் கல்யாண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கண் சிகிச்சை முகாமை கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தமிழ்செல்வன் துவக்கி வைத்தார். கல்லூரி உதவிப் பேராசிரியர் மகாராஜன் தலைமை தாங்கினார். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை முதன்மை மேலாளர் மாணிக்கம் ம மேலாளர் பேச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சுமார் 250 பேருக்கு இலவச கண் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள். இந்த முகாமில் சுமார் 15 பயனாளிகள் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

முகாம் ஏற்பாடுகளை கல்லூரி இயந்திரவியல் துறை தலைவர் செல்வகுமார், உதவிப் பேராசிரியர் கவிதாமணி செய்திருந்தனர்.







