கோவில்பட்டியில் இருந்து சென்ற மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகத்தினர் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அஞ்சலி
Oplus_16908288
ஊதிய உயர்வு கேட்டு நடந்த போராட்டத்தின் போது திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிர் நீத்த மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் 17 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு அதன் நிறுவனத் தலைவர் அன்புராஜ் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் இறங்கி மலர் வளையம் வைத்து உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னதாக, மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பாக கோவில்பட்டியில் மாவீரன் சுந்தரலிங்கனார் திருவுருவச் சிலைக்கு மூமமுக நிறுவனத் தலைவர் அன்புராஜ் தலைமையில், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அங்கிருந்து தாமிரபரணி ஆற்றிற்கு அஞ்சலி செலுத்த செல்லும் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திருநெல்வேலிக்கு புறப்பட்டனர்.

நிகழ்ச்சியில், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் முத்துக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் பிரகாஷ், மாநில பொறுப்பாளர் பொன்னுச்சாமி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, இளைஞரணி செயலாளர் பால்துரை, கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் பொன் மாடசாமி, நகர செயலாளர் ஆகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







