கோவில்பட்டி கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு
Oplus_16908288
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி)யில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பாக என் பெற்றோர், என் கல்லூரி, என் பெருமை போதைப்பொருள் இல்லா எதிர்காலம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி இயக்குநர் பா.மகேஷ்குமார் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி சுந்தரனார் பல்கலைக்கழகம், இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் இ.எனலாப் பெரியார் கலந்துகொண்டு போதைப்பொருள் இல்லா சமுதாயத்தை பற்றி சிறப்புரையாற்றினார்.
முடிவில் முதலாம் ஆண்டு முதுகலை வணிகவியல் துறை மாணவி ஹரிதாஸ்ரீ நன்றி கூறினார்.
திறன் மேம்பாட்டு பயிற்சி

கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில், கோவில்பட்டி ஜெயம் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து முப்பரிமாண (3D) வடிவமைப்பு மற்றும் அச்சிடுதல்) குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிப்பட்டறை (3D Design and Printing) கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இரண்டாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவி எம். கஞ்சனா வரவேற்று பேசினார்.
கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ம அ.பாண்டியராணி தலைமை தாங்கி பேசினார். இயற்பியல் துறை இணைப் பேராசிரியரும் துறைத்தலைவருமான பெ. சித்ரலேகா வாழ்த்துரை வழங்கினார்.
இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் க. வேல்முருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஜெயம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.சீனிவாசன் முப்பரிமாண (3D) வடிவமைப்பு மற்றும் அச்சிடுதல் தொழில்நுட்பத்தின் அடிப்படைகள் அதன் பயன்பாடுகள் மற்றும் தொழில்துறை சார்ந்த வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார். நிகழ்ச்சியின் முடிவில் மூன்றாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவி எஸ். விஷ்ணுபிரியா நன்றி கூறினார்.







