• March 6, 2026

அரசு வேலைவாய்ப்புகளில் தெலுங்கு மொழி பேசும் சிறுபான்மையினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு; கம்ம நாயுடு மகாஜன சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

 அரசு வேலைவாய்ப்புகளில் தெலுங்கு மொழி பேசும் சிறுபான்மையினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு; கம்ம நாயுடு மகாஜன சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் தென் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில செயலாளா் சின்னசாமி தலைமையில் கோவில்பட்டி G.K.S லாட்ஜ் மீட்டிங் ஹாலில் நேற்று நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :-

* வடுகர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் கம்மவார்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் சேர்க்க வேண்டும் 

*தமிழகத்தில் தெலுங்கு மொழி பேசும் இன மக்களுக்கு மொழிவாரி சிறுபாண்மையினா் என சான்று தடையில்லாமல் ( இணையதளம் மூலம் ) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

*மொழிவாரி சிறுபான்மை கல்வி நிறுவனங்களை மருத்துவம் , பொறியியல் , கலை & அறிவியல் கல்லூரிகள் பட்டியலிட்டு அரசு வெளியிட வேண்டும். 

 *அரசு வேலைவாய்ப்புகளில் தெலுங்கு மொழி பேசும் சிறுபான்மையினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 

*அரசியலில் தெலுங்கு பேசுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும் 

*உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு கோவில்பட்டியில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

*கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *