ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது; பொது தேர்தலைவிட அதிக வாக்குகள் பதிவு
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.
. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக முக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீத தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர்.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59.28% வாக்குகள் பதிவாகி இருந்தன, ஈரோடு கிழக்கில் மொத்தம் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன
மாலை 5 மணிக்கு 70.58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே 2021 சட்டசபை பொதுத்தேர்தலை விட அதிக வாக்குகள் பதிவாகியது. 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் 1,60,603 பேர் வாக்களிதத்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 சட்டசபை பொதுத்தேர்தலில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் 66.56 என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை 6 மணி நிலவரப்படி 75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன, இந்த தேர்தல் மிகவும் அமைதியாக நடந்தது. பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.