தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையம் மார்ச் 1ம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படும் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தூத்துக்குடி – மதுரை இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி தூத்துக்குடியில் 1வது கேட், 2வது கேட், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது தூத்துக்குடி முதல் மீளவிட்டான் வரை இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதால் வருகிற 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை மேலூர் ரெயில் நிலையம் தற்காலிகமாக மூடப்படும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.