தூத்துக்குடி: மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் குவிந்தன

 தூத்துக்குடி: மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் குவிந்தன

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்,  தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  இன்று  (27.2.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி சார் ஆட்சியர் க.கவுரவ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய  410 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  அறிவுறுத்தினார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, தொழிற்கடனுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 17 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்து, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார். 

தொடர்ந்து, வளாகத்தில் அமர்ந்திருந்த முதியோர்களிடமும் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *