• May 20, 2024

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் எதிரே சாலையோரம் கம்பிவேலி அமைக்கும்பணி

 கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் எதிரே  சாலையோரம் கம்பிவேலி அமைக்கும்பணி

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தை பல ஆண்டுகளாக வெறும் காட்சி பொருளாக வைத்து இருப்பதற்கு அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் தான் காரணம்,’

கூடுதல் பஸ் நிலையம் பாதுகாப்பு இல்லாத இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.. முதலில் பாதுகாப்பான இடத்தில் கட்டி இருக்க வேண்டும்.. அதையும் செய்யவில்லை.. கட்டிய பின்னர் பாதுகாப்பான முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை.

பஸ் நிலையமும் தரமானதாக அமையவில்லை. சமூக விரோத செயல்களின் கூடாரமாக திகழ்கிறது. பயணிகள் உள்ளே செல்வதற்கே பயப்படும் நிலை உள்ளது.  அரசு மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள், பஸ் நிலையத்துக்குள் செல்வதில்லை. அதற்கு மாறாக பஸ் நிலையத்தின் வெளியே இறக்கிவிட்டு செல்கின்றன, அதேபோல் வெளியே வெயில் ,மழை என்று பாராமல் அவதிப்படும் பயணிகளை ஏற்றிசெல்கின்றனர்.

 இன்னும் சிலர் பயணிகளை ஆபத்தான முறையில் சர்வீஸ் ரோட்டுக்கு கூட வராமல் நான்கு வழி சாலையில் இறக்கிவிட்டு செல்கிறார்கள். இதனால் பலர் விபத்துகளை சந்தித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அரசு பெண் அலுவலர் ஒருவர் இது போல் நான்கு வழி சாலையில் இறக்கிவிட்டபின் அவர் சாலையை கடந்தபோது கார்மோதி இறந்து போனார்/

கூடுதல் பஸ் நிலையத்திற்கு வரமால் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி இறங்கி செல்லும் பஸ்களை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பிடித்த வைத்து நடவடிக்கை எடுத்து இருந்தால் கொஞ்சமாவது உள்ளே வர முயற்சி செய்து இருப்பார்கள்…

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இப்போது ஒரு உயிர் பறிபோனபிறகு நான்கு வழி சாலையில் இருந்து சர்வீஸ் ரோட்டுக்கு யாரும் வராத வகையில் கம்பிவேலி அமைக்கும் பணியை அதிகாரிகள் இன்று தொடங்கி இருக்கிறார்கள்/

இனிமேல் நான்கு வழி சாலையில் இறக்கிவிட்டால் பயணிகள் நேராக சர்வீஸ் ரோட்டுக்கு வரமுடியாது. நான்குவளிசாலையில் சிறிது தூரம் நடந்து சென்று கூடுதல் பஸ் நிலையம் வரவேண்டும்.

மக்கள் நடந்து செல்லும் பகுதியில் கம்பி வேலி போடுவதால் மட்டும் விபத்துக்களை தடுக்க முடியாது.. அனைத்து பஸ்களையும் கூடுதல் பஸ் நிலைய பகுதிக்கு வர வைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *