• May 20, 2024

கோவில்பட்டியில் அதிக கடைகளுடன் புதிய மார்க்கெட் உருவாக்க வேண்டும் ; சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

 கோவில்பட்டியில் அதிக கடைகளுடன் புதிய மார்க்கெட் உருவாக்க வேண்டும் ; சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது  மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் தலைமை  தாங்கினார்..

கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனி முத்துராஜ் மாநில செயற்குழு உறுப்பினர் முத்து கணேஷ் மாநில பொதுக்குழு பூமி பாலகன் ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் ஐயா துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள் வருமாறு:-‘

* ஈரோட்டில்  நடைபெற இருக்கும்  கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சி நிர்வாகிகள் 10 வாகனங்களில் சென்று கலந்து கொள்ளவேண்டும்.

 *கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி மார்க்கெட்டை இடிக்காமல் மக்களுக்கு பயன்பெறும் வகையில் அதிக கடைகளுடன் புதிய மார்க்கெட் கட்டித் தர வேண்டும்
*புதிய பஸ் நிலையத்தில் விபத்துகளை தவிர்த்திட அனைத்து பஸ்களும்  பஸ் நிலையத்துக்குள் சென்று திரும்பவும், பாதுகாப்பான முறையில் பயணிகளை இறக்கி விட்டு செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

*கோவில்பட்டி நகரத்துக்குள்ளே சுற்றித் திரியும் நாய்கள், மாடுகள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கின்றன,.போக்குவரத்து நெருக்கடியான  ரோட்டில் படுத்துக் கொண்டிருப்பதை தடுக்க  நகராட்சி நிர்வாகம் உடனடியாக மாடு உரிமையாளர்களிடம் அபராதம்  விதித்து இனி இந்த தவறு நடக்காத அளவுக்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

*கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறையானது, கோவில்பட்டி நகரின் சாலையின் நடுவே  தடுப்பான்கள் வைத்து  இருப்பதால், வாகனங்கள் செல்வதற்கு மட்டுமே இடம் உள்ளது சாலையோரத்தில்  பாதசாரிகள் நடப்பதற்கு, இரு சக்கரம் வாகனங்கள் செல்வதற்கு இடம் இல்லாமல் மக்கள்  சிரமப்படுகிறார்கள்  சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி  எந்த ஒரு விபத்து நடைபெறாமல் இருப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

கோட்டாட்சியரிடம் மனு

பின்னர் சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்/ஆர்.பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமியை சந்தித்தனர்.

கோவில்பட்டியில் புதிய மார்க்கெட் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் மேலும் பழைய மார்க்கெட் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனக் கூறி மனு அளித்தனர்.

மேலும் மனுவில் உள்ள கோரிக்கைகள் பற்றி விளக்கி கூறினார்.,மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *