• May 19, 2024

71-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின்  கேக் வெட்டி கொண்டாடினார்

 71-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின்  கேக் வெட்டி கொண்டாடினார்

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 70 வயது முடிந்து 71-வது வயது பிறந்தது. காலையில் வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். மனைவி, மகன்,  மகள், பேரன்,. பேத்திகள் பங்கேற்றனர். ஸ்டாலின் கேக் வெட்டி அனைவர்க்கும் ஆசையுடன் ஊட்டிவிட்டார்.

பின்னர் ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு சென்று அங்கு கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினார். தொடர்ந்து ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். அப்போது ஸ்டாலினுக்கு கனிமொழி, அவரது கணவர் அரவிந்தன் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து மெரினா கடகரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மு.க.ஸ்டாலின்  அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் சந்தித்து பிறந்தாநாள் வாழ்த்து கூறினார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ்  தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர்  தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக கூட்டணி கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *