ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
![ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை](https://tn96news.com/wp-content/uploads/2024/02/689b2e93-47fc-4c33-8ab9-fbb4bc86aa9c-720x560.jpeg)
.பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. அதிலும், ஆண்டின் ஆவணி மற்றும் மாசி மாத காலத்தில் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மகா சங்கடஹர சதுர்த்தியாகும்.
மகிமை நிறைந்த மாசி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாளாக கருதப்பட்டது.
கோவில்பட்டியை அடுத்த ஓடைப்பட்டி வ்ன்னி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன, பக்தர்கள் அதிக அளவில் இந்த பூஜையில் கலந்து கொண்டனர். பூஜைகளை கோவில் குருக்கள் பிரசன்ன வெங்கடேஷ் நடத்தினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)