• May 9, 2024

உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் எல்லோரா கைலாசநாதர் கோவில்

 உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் எல்லோரா கைலாசநாதர் கோவில்

பண்டைய காலத்தில் முக்கிய தெய்வமாக சிவனையே வழிபட்டு வந்துள்ளனர்.ஆகையால் சிவனுக்காக பல முக்கியமான கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் நகரிலிருந்து 29 கி.மீ.தொலைவில்,1200 ஆண்டுகள் பழமையான பண்டைய காலத்து இந்து கோவில் அமைந்துள்ளது.

இதனை கைலாசா கோவில் என்று அழைப்பார்கள்.இதனின் முக்கிய தெய்வம் சிவன்.

சிவனை முக்கிய தெய்வமாக கொண்டு கட்டப்பட்ட 34 பெருமைகள்  வாய்ந்த கோவில்களில் இது ஒன்றாகும்.இதனை எல்லோரா குகை( Ellora Caves)கோவில் என்றும் அழைப்பார்கள்.

8 ஆம் நூற்றாண்டில் திராவிட கட்டிட கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த கைலாசா கோவில் அமைந்துள்ளது. .மேலும் இந்த கோவிலை ஒரே பாறையில் செதுக்கியது தான் இதனின் முக்கிய அம்சம் ஆகும்.

இராஷ்டிரகூட வம்ச மன்னர்,கிருஷ்ணா என்பவரால் இக்கோவில் கட்டப்பட்டது..6ம் மற்றும் 10ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்திய துணை கண்டத்தின் பெரும்பகுதியை ருஷ்டிரகுடா வம்சம் ஆட்சி செய்தது.

இக்கோவில் கி.மு.757 மற்றும் 783க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாகும்.. இக்கோவில் கைலாசா மலையை ஒட்டியவாறு,அதனை பார்க்கும் திசையில் அமைக்கப்பட்டிருக்கிறது..இந்து மதத்தின் கூற்றுப் படி சிவன் உண்மையாக இங்கு வசிப்பதாக நம்பப்படுகிறது.

தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள்,கோவிலில் உள்ள தூண்களின் அடையாளங்களை வைத்து கூறுகையில் இந்த கோவிலை உளியினால் செதுக்கிய அடையாளங்கள் காணப்படுகிறது என்றும்,மேலும் இதனை செதுக்க மூன்று வகையான உளிகளை பயன்படுத்தியுள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.

இக்கோவில் மேலிருந்து செங்குத்தாக கட்டப்பட்டதாக கூறுகிறார்கள்.இந்த கட்டுமான பணியில் இருந்த முக்கிய கலைஞரால் முன்பக்கத்தில் இருந்து செதுக்குவதில் சிரமம் இருந்திருக்கலாம் என்றும்,அதனால் கூட மேலே இருந்து செங்குத்தாக இந்த கட்டிடத்தை கட்டிருப்பர் என்றும் கூறுகிறார்கள்.

இந்த ஒற்றைக்கல் கட்டமைப்பை நிர்மாணிப்பதற்காக 20 ஆண்டு காலத்தில் சுமார் 4000000 டன் நீண்ட பாறைகள் வெளியேற்றப்பட்டன என்று ஆய்வில் கூறுகிறார்கள்.

எல்லோராவில் மொத்தம் 34 குடவறை கோவில்கள் காணப்படுகின்றன.முதல் 12 குடவறை கோவில்கள் பவுத்த கோவில்கள்..அடுத்தடுத்த 17 குடவறை கோவில்கள் இந்துக் கோவில்கள்..மீதமிருக்கும் 5 கோவில்கள் சமணர்களுக்கானது..

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இவை அனைத்தும் ஒரே காலகட்டத்தில் வழிபாட்டில் இருந்தன. இவற்றை உருவாக்கியவர்கள் 3 மதங்களுக்கும் சமமான ஆதரவை அளித்து 3 மதத்தினரும் ஒரே இடத்தில் வழிபாடு செய்து தங்களின் மதக்கல்வியையும் நடத்த அனுமதித்திருக்கிறார்கள்.

இந்த 34 கோவில்களில் நடுநாயகமாக நிற்பது கைலாசநாதர் கோவில். முழுக்கோவிலையும் உச்சியில் இருந்து அடிக்கட்டுமானம் வரை செதுக்கியிருக்கிறார்கள்.148 அடி நீளமம்,62 அடி அகலம்,100 அடி உயரம் கொண்ட பிரமிப்பூட்டும் இந்தக் கோவிலுக்கு வெளியில் இருந்து ஒரு சிறுகல் கூடக் கொண்டு வந்து சேர்க்கப்படவில்லை.

ஒட்டுமொத்த ஆலயமும் 85,000 கன மீட்டர் அளவுள்ள ஒரே தாய்ப்பாறையில் வடிக்கப்பட்டது.

கைலாயம் என்றதும் இறைவன் நினைவுக்கு வருவது போலவே, கயிலையைப் பெயர்க்க முயன்ற ராவணனும் நினைவுக்கு வருவான்.

இந்த கோவிலில்  ராவணனின் கம்பீரமான சிற்பங்கள் அமைந்துள்ளன.ராவணன் கயிலையைப் பெயர்க்க முயலும் காட்சிகள் மிக நுட்பமாக வடிக்கப்பட்டுள்ளன..

பரமசிவன் பார்வதியோடும் நந்தியோடும் இன்னும் பிற பூதகணங்களோடு இருக்கும் கயிலாயத்தை அவன் பெயர்க்கும் காட்சி தத்ரூபமாக வடிக்கப்பட்டிருக்கிறது.

.ராவணன் தனது 10 தலைகளில் 9 தலைகளை ஈசனுக்கு காணிக்கையாக தர, அந்த  9 தலைகளையும் ஈசன் மாலையாக கோர்த்து அணிந்திருக்கும் சிற்பமும் சிறப்பு பெற்றது.

உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் இந்த கலைக்கோவில்களை யுனெஸ்கோ அமைப்பு, பாரம்பரியக் களமா’க குறிப்பிட்டுள்ளது.

காசி விஸ்வநாதன், திருநெல்வேலி-

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *