• May 9, 2024

சுருக்கு கயிறு மாட்டி மான் உயிரிழப்பு: 3 வன ஊழியர்கள் பணியிடைநீக்கம்-வனத்துறை அதிகாரி நடவடிக்கை

 சுருக்கு கயிறு மாட்டி மான் உயிரிழப்பு: 3 வன ஊழியர்கள் பணியிடைநீக்கம்-வனத்துறை அதிகாரி நடவடிக்கை

மாவட்ட வன அதிகாரி அபிஷேக் தோமர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட உடன்குடியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் `மிளா’ மான்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றன. தற்போது உடன்குடியில் அணு மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அவ்வப்போது மான்கள் ஊருக்குள் வந்து விடுகின்றன,
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு மான் ஊருக்குள் வந்து விட்டு திரும்பி செல்ல வழி தெரியாமல் சுற்றி வந்தது, இது பற்றி அந்த பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருச்செந்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனக்காப்பாளர், வனக்காவலர், வனவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மான் கழுத்தில் சுருக்கு கயிறு போட்டு அதனை பிடிக்க முயன்றனர். ‘
இதில் மான் கழுத்தில் சுருக்கு கயிரு மாட்டிக்கொண்டது, ஆனால் அதில் இருந்து தப்பிச்செல்லும் முயற்சியில் தொடர்ச்சியாக மான் துள்ளி குதித்ததில் கயிறு கழுத்தில் இறுக்கி சிறிது நேரத்தில் இறந்து விட்டது.
மானை பிடிக்க வந்த வனத்துறை ஊழியர்கள் மது போதையில் இருந்ததாக பகுதி மக்கள் குற்றச்சாட்டினர். மான் உயிரிழப்புக்கு காரணமான 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது,.
இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் நடவடிக்கை எடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:_
மான் உயிர் இழக்க காரணமாக இருந்த திருச்செந்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனக்காப்பாளர் கந்தசாமி, வனக்காவலர் ஜோஸ்வா, வனவர் ஆனந்த் ஆகிய மூவரும் மானை தவறுதலாக கயிறு கட்டி பிடித்து உயிரிழந்த விவகாரத்தில் தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இனிவரும் நாட்களில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க அனைவருக்கும் முறையான பயிற்சிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *