கோவில்பட்டி 22வது வார்டு பகுதியில் 2023 காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி
கோவில்பட்டி 22வது வார்டு பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு 2023 தினசரி காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். 22வது வார்டு உறுப்பினர் ஜேஸ்மின்லூர்து மேரி மாவட்ட திமுக சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
நிகழ்ச்சியில் வார்டு அவை தலைவர் மிக்கேல் ,வார்டு துணைச் செயலாளர் ராமர், வார்டு பிரதிநிதி கிருபாகரன் ,பொருளாளர் நாகராஜ், நகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராஜன்.வேணுகோபால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 22வது வார்டு பகுதிகளுக்குட்பட்ட கடைகள், வியாபாரிகள், மற்றும் பொதுமக்களுக்கு, 2023 காண காலண்டர்களை வழங்கினர்…