• November 1, 2024

சென்னை போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்ட கோவில்பட்டி ஆசிரியர்களுக்கு போலீசார் திடீர் தடை  

 சென்னை போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்ட கோவில்பட்டி ஆசிரியர்களுக்கு போலீசார் திடீர் தடை  

பதவி உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்வது, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவது என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  சென்னையில் தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்)  சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து  ஆசிரியர்கள் நேற்று முன்தினம் இரவு  பஸ்சில் சென்னை புறப்பட திட்டமிட்டு இருந்தனர்.

இது பற்றிய ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதை தொடர்ந்து கோவில்பட்டியில் இருந்து சென்னை போராட்டத்தில் பங்கேற்க ஆசிரியர்கள் செல்லக்கூடாது என்பதற்காக அவர்களை பஸ் ஏறுவதற்கு முன்பு தடுத்து நிறுத்தினார்கள்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆசிரியர்கள், போலீசையும், அரசையும் கண்டித்து குரல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெகு நேரம் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் பிறகும் அவர்கள் சென்னை செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதனால் போலீசாருடன் ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர விவாதத்துக்கு பிறகு ஆசிரியர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *