• May 13, 2024

கோவில்பட்டியில் சிறுவன் ஓட்டிய கார் விபத்து : பெற்றோர் மீது நடவடிக்கை உண்டா?

 கோவில்பட்டியில் சிறுவன் ஓட்டிய கார் விபத்து : பெற்றோர் மீது நடவடிக்கை உண்டா?

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக போலீஸ் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவது 199 (a)ன் படி குற்றமாகும். 

மீறினால் மேற்படி இளஞ்சிறாருக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது. வாகனம் ஒரு வருட காலம் சிறை பிடிக்கப்படும். பெற்றோர்களுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதமும், 3 வாரம் முதல் 3 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று காலை கோவில்பட்டியில் மெயின் ரோட்டில் இருந்து மாதாங்கோவில் திரும்பிய போது ஸ்கூட்டரில் சென்றவரை இடித்து தள்ளிவிட்டு, மிட்டாய் கடைக்குள் புகுந்து நின்றது.

இந்த காரை ஓட்டி வந்தது 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.காரில் சிறுவனின் தாயார் இருந்தார். கண் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு ராஜீவ் நகரில் உள்ள வீட்டுக்கு சென்றபோது இந்த விபத்து நடந்து இருக்கிறது.

விபத்தில் ஸ்கூட்டரில் சென்றவர், மிட்டாய் கடை ஊழியர் ஆகியோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவுப்படி, தற்போது கோவில்பட்டியில் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதற்காக, சிறுவனின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி விடுத்து உள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *