திருவள்ளுவர் மன்ற கூட்டம்
![திருவள்ளுவர் மன்ற கூட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2024/04/IMG-20240429-WA0098-850x560.jpg)
கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற கூட்டம் நடந்தது. மருத்துவர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். மருத்துவர் பாலன் முன்னிலை வகித்தார். திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப்பாண்டி வரவேற்றார்.
மன்ற செயலாளர் நம்.சீனிவாசன் “சங்க இலக்கியத்தின் சாரல்” எட்டுத்தொகை காட்டும் எழில் மிகு வாழ்வியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முனைவர் சம்பத்குமார், உரத்த சிந்தனை சிவானந்தம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தமிழ்ச்சுடர் விருது பெற்ற திருவள்ளுவர் மன்ற இணைச்செயலாளரும், மகிழ்வோர் மன்ற இயக்குநருமான ஜான்கணேஷ் பாராட்டப்பட்டார்.பின்னர் ஜான்கணேஷ் ஏற்புரை வழங்கினார். மன்ற துணை தலைவர் திருமலைமுத்துச்சாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விழாவில், புரவலர் விநாயகா ஜி.ரமேஷ், ஆசிரியர் சக்திவேல், தொழிலதிபர் பாபு, ரவிமாணிக்கம் மற்றும் ஜெயா ஜெனார்த்தனன், முத்துச்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)