செல்பி மோகம்: 100 அடி பள்ளத்தில் விழுந்த தூத்துக்குடி வாலிபர்

 செல்பி மோகம்: 100 அடி பள்ளத்தில் விழுந்த தூத்துக்குடி வாலிபர்

சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை  அதிகரித்து காணப்படுகிறது

தூத்துக்குடியை சேர்ந்த சில வாலிபர்கள்  இன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர்.

கொடைக்கானலில் உள்ள டால்பின் நோஸ் சுற்றுலா பகுதிக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த ஒரு பாறையின் விளிம்பிலிருந்து செல்பி எடுக்க முயன்றனர்.

அப்போது, தன்ராஜ் என்ற வாலிபர்  100 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.. இதனால் உடன் இருந்த நண்பர்கள் பதறிப்போனார்கள். உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து போலீசார் மற்றும் வனத்துறையினர் , தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர். பள்ளத்தில் விழுந்த இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு, பள்ளத்தில் விழுந்த தன்ராஜை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரை டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *