• May 9, 2024

கோவில்பட்டி தொகுதியை ஒதுக்கி வைத்துள்னர்; கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு

 கோவில்பட்டி தொகுதியை ஒதுக்கி வைத்துள்னர்; கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணியை ஆதரித்து முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ வில்லிசேரி, சத்திரப்பட்டி, இடைச்செவல் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது அவர் பேசியதாவது:-

தேசிய கட்சிகளினால் தமிழகத்தின் நலன் பாதுகாக்கப்படுவதில்லைமாற்றான் தாய் மனப்பான்மையுடன் தேசிய கட்சிகள் நடந்து கொள்கின்றன

தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் நமது கொள்கைகளை வலியுறுத்த முடியாது

தமிழகத்தில் 30 இடங்களில் அதிமுக வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை உள்ளது பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் அதிமுகவிற்கு மக்களிடையே எழுச்சி உள்ளது

பிஜேபி, இண்டியா கூட்டணி என யார் வெற்றி பெற்று பிரதமராக வந்தாலும் அதிமுக தமிழக உரிமைகள், நலனுக்காக வலியுறுத்த முடியாது

கூட்டணியில் இருந்தால் வலியுறுத்த முடியாது

பாஜக வடக்கே. வளர்ந்து இருக்கலாம். இங்கே வளரவில்லை பல தேர்தலை பார்த்து விட்டோம், பாஜகவுடன் சேர்ந்து நாமும் கீழே போய் விட்டோம்

தூத்துக்குடி தொகுதியில் பாஜக நிற்கவில்லை அவர்கள் கூட்டணி சார்பில் காணமால் போன சைக்கிளை கொண்டு வந்துள்ளனர் . அதுவும் பஞ்சராக தான் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் டம்மி வேட்பாளரை நிறுத்தி உள்ளனர். அதை பற்றி கவலை இல்லை

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழிக்கு எதிராக பாஜக வேட்பாளரை நிறுத்தாமல் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதில் உடன்பாடு இருப்பதாக கூறப்படுகிறது

திமுக – பாஜக இடையே தான் கள்ள கூட்டணி ஏற்பட்டுள்ளது இன்றைக்கு தூத்துக்குடி தொகுதியை பொறுத்தவரை அதிமுக – திமுக வேட்பாளர்கள் இடையே தான் போட்டி உள்ளது

கடந்த ஐந்தாண்டுகளில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்பி எவ்வித பணியும் மேற்கொள்ளவில்லை குறிப்பாக கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துள்ளார்

.இவ்வாறு கடம்பூர் ராஜு பேசினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *