• May 9, 2024

கோவில்பட்டி காந்தாரி அம்மன் கோவில் பங்குனி விழா; 7 அடி நீள அலகு குத்திய பக்தர் ஊர்வலமாக சென்றார்  

 கோவில்பட்டி காந்தாரி அம்மன் கோவில் பங்குனி விழா; 7 அடி நீள அலகு குத்திய பக்தர் ஊர்வலமாக சென்றார்  

கோவில்பட்டி மில் தெருவில் அமைந்துள்ள  மகா புவன காந்தாரி அம்மன் கோவில் பங்குனி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த 26ம் தேதி முகூர்த்தக்கால் நடுவிழா நடைபெற்றது. அதை முன்னிட்டு முதல் நாள் காந்தாரி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது

2-ம் நாள் அம்மனுக்கு சிறப்பு ஹோமம் அபிஷேகம் நடைபெற்றது 3- நாள் அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. 4- நாள்  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தெம்மாங்கு கிராமிய நிகழ்ச்சி நடைபெற்றது

5- நாள் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் ராகவேந்திரா பக்தர்கள் குழு பந்தல ராஜா ஐயப்ப பக்தர் குழு இணைந்து அம்மன் பஜனை பாடல்கள் நிகழ்ச்சி நடத்தினார்கள்.

6-ம்  நாள் மஞ்சள் மற்றும் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. புது ரோடு முச்சந்தி செல்வ விநாயகர் கோவில் முன்பிலிருந்து அம்மன் பாலகன் முருகன் 7 அடி அலகு குத்தி நடந்து வந்தார், அவரை தொடர்ந்து  பால்குடம் மற்றும் மஞ்சள் பால்குடம் சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

 ஊர்வலம் புது ரோடு மற்றும் செல்லப்பாண்டி நகர் வழியாக மில்தெருவில் அமைந்துள்ள புவன காந்தாரி அம்மன் கோவில் வந்து அடைந்தது சுமார் 300க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் மஞ்சள் பால்குடம் மற்றும் பால்குடத்துடன் வந்து காந்தாரி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்

பின்னர் அன்னதானம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடந்தது.

7-ம் நாள்  நிகழ்ச்சியாக திங்கள்கிழமை அன்று 108 திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது

8 ம் நாள் அக்னி சட்டி ஊர்வலம் நடக்கும். உச்சிகால பூஜை நடைபெற உள்ளது அதனை தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது, பின்னர்  108 அக்னி சட்டியும் 54 அக்கினிசட்டியும் ஏந்தி பக்தர்கள் உலா வருதல் நடைபெறும்.

இரவில் சாமக் கொடை பூஜை மற்றும் பொங்கல் வழிபாடு நடைபெற உள்ளது இரவு 11:30 மணியளவில்  50 க்கும் மேற்பட்ட   ஆண்களும் பெண்களும் பூக்குழி இறங்குவார்கள்.

9-ம் நாள் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 108 பெண்கள் பங்கேற்கும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது முளைப்பாரி ஊர்வலம் ஏற்பாடுகளை  சட்டமுத்து முருகேஸ்வரி செய்துள்ளார்.

10-ம் நாள் பொங்கல் விழா நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை காந்தாரி அம்மன் கோவில்  தர்மகத்தா. ரவி பாண்டியன், தலைவர். ஏமராஜ், செயலாளர்.மகேந்திரன் பொருளாளர். காந்தாரி முத்து,. துணைத்தலைவர் கருப்பசாமி, துணைச் செயலாளர் எம். கருப்பசாமி துணைப் பொருளாளர் இளையராஜா. இணை பொருளாளர் பொன்ராஜ். விழா பொறுப்பாளர்கள். காந்தாரிராஜ் . பொன்ராஜ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *