தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் `மராத்தான்’ ஓட்டம்



தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் (IMA), கோவில்பட்டி கிளை சார்பில் “போதைப்பழக்கத்திற்கு எதிராக ஒன்றிணைவோம் – ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்” என்ற கருப்பொருளில் மராத்தான்–வாக்கத்தான் நடைபெற்றது.

இன்று ஜூலை 2 ஆர்த்தி மஹாலில் இருந்து தொடங்கிய மரத்தானை, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, நகர்மன்றத் தலைவர் ஆர். எஸ். ரமேஷ்,, காவல்துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் கோவில்பட்டி நகர செந்தில்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் பசுமை இயக்கத்தின் நிர்வாகிகள் பாபு, ரவி மாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.மூத்த மருத்துவர்கள், இளம் மருத்துவர்கள், மருத்துவர்கள் குடும்பத்தினர், செவிலியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று, போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்திய மருத்துவ சங்கம் கோவில்பட்டி கிளையின் பொருளாளர் டாக்டர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.இந்திய மருத்துவ சங்கம் கோவில்பட்டி கிளை செயலாளர் டாக்டர் சி. சிவநாராயணன் நன்றி கூறினார்.







