கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் உண்ணாவிரத போராட்டத்திற்கு மறுத்து ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில், சாலை, குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை வசதி கேட்டு தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு செய்திருந்தோம்.
காவல்துறை தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுத்து, ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

எனவே தோழர்கள் அனைவரும் 1-7-2026- காலை 10 மணிக்கு ESI அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அமைப்பின் தலைவர் தமிழரசன், செயலாளர் பெஞ்சமின் பிராங்க்ளின் , பொருளாளர் சுபேதார் கருப்பசாமி ஆகியோர் கூட்டாக ஒரு அறிக்கையில் தெரிவித்து இருந்தனர்.
அதன்படி கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை வசதி கேட்டு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி ESI அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகி பாலாஜி, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், இந்திய கலாச்சார நட்புறவு கழக மாநில துணை தலைவர் அபிராமி P.முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ராமலட்சுமி, மக்கள் நீதி மய்யம் இராதாகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி செண்பகராஜ், INTUC ராஜசேகரன், பழனிச்சாமி, இந்திய தேசிய காங்கிரஸ் துரைராஜ், பாண்டியனார் மக்கள் இயக்கம் வழக்கறிஞர் சீனி ராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், பகத்சிங் ரத்த தான கழகம் மா.காளிதாஸ், தொழிலாளர் விடுதலை முன்னணி கலைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.







