கோவில்பட்டியில் 3 டாக்டர் களுக்கு பி.சி.ராய் விருது


நாட்டின் புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் பிதான் சந்திர ராயின் பிறந்த தினமான ஜூலை 1ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
மக்களின் ஆரோக்கியத்திற்காக அயராது உழைக்கும் மருத்துவர்கள் தன்னலமற்ற சேவையை கௌரவிக்க தேசிய மருத்துவர்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த தேசிய மருத்துவர்கள் தின விழாவில் இளைஞர்கள் ரத்ததானம் வழங்குதல்,மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள்நடுதல்,மூத்த மருத்துவர்களுக்கு பி.சி.ராய் விருது வழங்குதல்,நலமுடன் வாழ 10 கட்டளைகள் விழிப்புணர்வு ஸ்டிக்கர் வெளியிடுதல்,
உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட தலைவர்கள் விநாயகா ரமேஷ், முத்துச்செல்வம், ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார்.
மூத்த மருத்துவர்களான என். டி. ஸ்ரீனிவாசன் மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன்,உறைவிட மருத்துவர் சுதா ஆகியோர்களுக்கு பி.சி.ராய் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர்.
மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.நலமுடன் வாழ 10 கட்டளைகளுக்கான விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை மூத்த மருத்துவர் என்.டி ஸ்ரீனிவாசன் வெளியிட மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
மருத்துவர்கள் அனைவருக்கும் டாக்டர் பிதான் சந்திர ராயின் புகைப்படம் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

ரோட்டரி சங்க நிர்வாகிகள் சீனிவாசன்,பழனி குமார், பிரபாகரன்,கிருஷ்ணசாமி,நடராஜன்,கருப்பசாமி,மணிகண்டன்,வழக்கறிஞர் முத்துராமலிங்கம், மருத்துவர்கள் துரை.பத்மநாபன்,
துளசிலட்சுமி,சூரிய பிரகாஷ்,காளீஸ்வரி,
உள்பட மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.







