கோவில்பட்டி அரசு மகளிர்பள்ளியில் சர்வதேச விண்கற்கள் தினம்
Oplus_16908288
1908 ஜூன் 30-ல் சைபீரியாவில் நிகழ்ந்த துங்குஸ்கா விண்கல் வீழ்ந்த தினத்தின் நினைவாக ஆண்டுதோறும் ஜுன் 30ம் தேதி சர்வதேச விண்கற்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

பூமிக்கு விண்கற்களால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், விண்வெளி பாதுகாப்பு ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
அதன்படி இன்று (ஜூன் 30) தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச விண்கற்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார்.பள்ளி இயற்பியல் ஆசிரியர்கள் கிரேனா,கமலா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமையாசிரியர் (பொறுப்பு)உஷா ஜோஸ்பின் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சர்வதேச விண் கற்கள் தின வால்போஸ்டர் மற்றும் பரிசுகளை வழங்கி பேசினார்.

மாணவிகளுக்கு விண்கற்கள் குறித்து இணைய வழி பயிற்சிகள் அளிக்கப்பட்டது. ஆசிரியர் சுப்பிரமணியன் உட்பட மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.







