கடன் தகராறில் அனல் மின்நிலைய ஊழியரை கடத்தி தாக்குதல்; 2 பேர் மீது புகார்
![கடன் தகராறில் அனல் மின்நிலைய ஊழியரை கடத்தி தாக்குதல்; 2 பேர் மீது புகார்](https://tn96news.com/wp-content/uploads/2023/11/images-34.jpg)
தூத்துக்குடி அனல் மின்நகரை சேர்ந்தவர் லிங்கதுரை (வயது 59). அனல் மின் நிலைய ஊழியரான இவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முத்தையாபுரத்தை சேர்ந்த சக்திவேல் (வயது43) என்பவர் மூலம் பிரதீப் (30) என்பவரிடம் ரூ. 2,10,000 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த தொகைக்கு ரூ. 1லட்சத்து 47 ஆயிரம் வரை வட்டி செலுத்தி உள்ளாராம். இந்நிலையில் கேம்ப்-2 பகுதி பஸ் நிறுத்தத்தில் லிங்கதுரை நின்று கொண்டிருந்த போது அங்கு காரில் வந்த பிரதீப், சக்திவேல் ஆகியோர் லிங்கதுரையை காரில் கடத்திச் சென்றனர்.
மேலும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் தர வேண்டும் என்று கூறி தாக்கியதாக அவரை கூறப்படுகிறது. பின்னர் புதுக்கோட்டை அருகில் காரிலிருந்து இறக்கி விட்டு சென்றதாக தெரிகிறது.
இதுகுறித்து தெர்மல் நகர் போலீசில் லிங்கதுரை, தன்னை தாக்கியதாக 2 பேர் மீதும் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)