கன மழைக்கு எட்டயபுரம் தெப்பக்குளம் நிரம்பியது
எட்டயபுரம் சமஸ்தானம் ராஜா மகாராஜா காலத்தில் 2௦0 ஆண்டுகளுக்கு முன்பு 6 ஏக்கர் பரப்பளவில் நான்கு புறங்களிலும் படிக்கட்டுகளுடன் கிருஷ்ணன் கோவில் தெப்பக்குளம் கட்டப்பட்டது.
இந்த தெப்பக்குளம் மன்னர்கள் காலத்தில் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக திகழ்ந்தது. தற்போது சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக இந்த தெப்பகுளம் முழுவதும் தண்ணீர் நிரம்பிவிட்டது.தெப்பக்குளத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தெப்பக்குளத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நடுவதற்கும், நீர் செல்லும் பாதையினை சுத்தப்படுத்துவதற்கும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை வழங்கினார்.
எம்.எல்.ஏ.மார்க்கண்டேயனுடன் எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவநீதகண்ணன், எட்டையபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், எட்டையபுரம் பேரூர் செயலாளர் பாரதிகணேசன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ் உட்பட பலர் சென்று இருந்தனர்.