தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது
![தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது](https://tn96news.com/wp-content/uploads/2023/11/a39cbc2d-a722-40a3-be88-d76de1a7c73d-e1701076815101-850x560.jpg)
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன், காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்கள் மகாலிங்கம், சாமுவேல், முத்துப்பாண்டி, காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம்பகுதியில் உள்ள அருள்(வயது 50) என்பவரது பலசரக்கு கடையில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படை போலீசார், கடைக்காரர் அருளை கைது செய்து, அவரிடமிருந்த ரூ, 3,10,400/- மதிப்புள்ள 374 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)