கோவில்பட்டி கோவிலில் திருகார்த்திகை பூஜை
![கோவில்பட்டி கோவிலில் திருகார்த்திகை பூஜை](https://tn96news.com/wp-content/uploads/2023/11/WhatsApp-Image-2023-11-27-at-09.26.16-850x560.jpeg)
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திரு கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு பரணி தீபம் இரவு 7 மணிக்கு திருகார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பூஜைகளை சுப்ரமணிய சுவாமி செய்தார். சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)