சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் கார்த்திகை மகாதீபம்
கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் நேற்று மாலை திருகார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகா இதையொட்டி மாலையில் பகதர்கள் குவிந்தனர்.
கோவில் மண்டபத்தில் மகாதீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோவில் மண்டபத்தில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
அவருக்கு முன்பாக ராட்சத விளக்கு வைக்கப்பட்டு எண்ணெய் நிரப்பப்பட்டு இருந்தது. மேலும் பக்தர்கள் எண்ணெய் வாங்கி வந்து ஊற்றினார்கள்.
இந்த கோவிலில் முருகபெருமான் சிலை கிடையாது. முருகனின் ஆயுதமான வேல் மூலவராக காட்சி அளிக்கிறது. அந்த வேலுக்கு நேற்று முருகப்ப்பெருமானை போன்று சிறப்பு அலங்காரம் செய்யபட்டு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து கோவில் குருக்கள் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த உற்சவர் முருகபெருமானுக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்தபிறகு ராட்சத மகா தீபத்தை எரிய செய்தார். அப்போது கூடி இருந்த பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா… வீரவேல் முருகனுக்கு அரோகரா… என்று பக்தி முழக்கம் எழுப்பினார்கள்.