கோவில்பட்டி கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவில் தொழில்நுட்ப கருத்தரங்கு (GEN-E TRIX 2025) நடைபெற்றது, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை சார்பில் நடந்த இந்த கருத்தரங்க நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
கருத்தரங்கில் காகித விளக்கக்காட்சி,சட்டத்தை யூகித்தல்,தொழில்நுட்ப வினாடி வினா,தனிநடிப்பு, புதையல் வேட்டை, எலக்ட்ரானிக்ஸ் ஸ்போர்ட்ஸ் போன்ற போட்டிகள் நடை பெற்றது.
ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி,சிவகாசி, ஏ.ஏ.ஏ. பொறியியல் கல்லூரி,விருதுநகர், திருச்சி அண்ணா பல்கலைக் கழகம், உதயா பொறியியல் கல்லூரி நாகர்கோவில், கோவில்பட்டி வெங்கடசாமி நாயுடு கல்லூரி போன்ற கல்லூரிகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் கணேஷ் வரவேற்று பேசினார். முடிவில் உதவி பேராசிரியை சத்யா நன்றி கூறினார். கருத்தரங்க ஏற்பாடுகளை ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர்கள் லட்சுமி,பெரியசாமி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.









