அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவில்பட்டி ஸ்டேட் பேங்க் முன்பு அமலாக்கதுறையை கண்டித்தும்,மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருண்பாண்டியன் தலைமையிலும் மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி, மாவட்ட செயலாளர் துரைராஜ்,பொதுக்குழு உறுப்பினர் உமாசங்கர்,ஐஎன்டியூசி ராஜாசேகரன் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பிரேம்குமார், காமராஜ்,மாரிமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் கார்த்தி காமராஜ், பொது செயலாளர் சண்முகராஜா,சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ராஜசேகரன், வட்டார தலைவர்கள் செல்லதுரை,மரியசூசை ராஜ், சிறுபான்மையினரின் மாவட்ட தலைவர் அருளதாஸ், பழனிசாமி,முன்னாள் வட்டார தலைவர் சுந்தர்ராஜ், மகேந்திரன்,பிரபாகரன், அருணாச்சலம், முருகேசன், கண்ணன், பிச்சைகனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்


