• April 19, 2025

கிராமபகுதிகளில் மரக்கன்றுகள் நட்டிய நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவர்கள்

 கிராமபகுதிகளில் மரக்கன்றுகள் நட்டிய நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவர்கள்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாளில் அவரை நினைவு கூறும் வகையில் சுற்றுசூழலின் நலன் கருதி எனது மண் எனது நாடு என்னும் தலைப்பில்மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்,.

 கோவில்பட்டி அய்யனேரி கிராம சுற்று வட்டாரம் மற்றும் பள்ளிகளில் 100 மரக்கன்றுகளை நட்டனர். இந்த பணியில்  30-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களுடைய சமூக, சமுதாய செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். அய்யனேரி ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரி காளியப்பன், துணைத்தலைவர் கே.பாண்டி முனியம்மாள், கல்லூரி இயக்குநர் எஸ்.சண்முகவேல் ,கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் துணைப் பேராசிரியர் கே.சுப்பிரமணியன் பங்கேற்று மாணவர்களை வழிநடத்தினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *