• May 9, 2024

மரத்தடி பிள்ளையாரின் மகிமைகள்

 மரத்தடி பிள்ளையாரின் மகிமைகள்

குளக்கரைகளிலும், மரத்தடியிலும்_விநாயகரை அதிகம் காணலாம். இதனால் அவர் எழுந்தருளி இருக்கும் இடங்களுக்கு ஏற்ப பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றார்.

இப்படிப்பட்ட சில பிள்ளையாரையும் அவரை எப்படி தரிசித்தால் சிறந்த பலன்கள் பெறலாம் என்பதையும் இங்கே காண்போம்…

 வன்னிமரபிள்ளையார்

இவர் வலஞ்சுழியாக இருப்பது விசேஷம். அதிலும், வடக்கு திசை நோக்கி அருள் பாலித்தால் இன்னும் விசேஷம். அவிட்டம் நட்சத்திரம் அன்று இவரை நெல் பொரியால் அர்ச்சித்து, அபிஷேகம் செய்து வழிபடுவதோடு, கன்னிப் பெண்களுக்கு தானம் கொடுத்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து சட்டென்று திருமணம் நடைபெரும்.

வில்வமரபிள்ளையார்

இவர் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பது சிறப்பு. சித்திரை நட்சத்திரம் அன்று, மளிகை பொருட்களை ஏழைகளுக்கு தானமாக வழங்கி, இந்த விநாயகரை வலம் வந்தால் பிரிந்த கணவன்-மனைவியர் விரைவில் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். இதே விநாயகருக்கு வியாழன், புதன் கிழமைகளில் சந்தனத்தால் அலங்காரம் செய்து வழிபட, படிக்க பிடிக்காத பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

அரசமரபிள்ளையார்

இவர் மேற்கு நோக்கி அமர்ந்திருப்பது சிறப்பு. பூசம் நட்சத்திரம் அன்று இவர்க்கு அன்னாபிஷேகம் செய்தால். பயிர் விளைச்சல் பெருகும், உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி உடனே கிட்டும், பண கஷ்டம் தீரும்.

ஆலமரபிள்ளையார்

இவர் வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு. மகம் நட்சத்திரம் அன்று இவருக்கு 5.வித சித்ரான்னங்கள் { எலுமிச்சை, தயிர், புளி, தேங்காய், சக்கரை பொங்கள் போன்றவை } படைத்து தானம் செய்தால் கடுமையான நோய்கள் விலகிவிடும்.

வேப்பமரபிள்ளையார்

இவர் கிழக்கு நோக்கி இருப்பது சிறப்பு, உத்திரட்டாதி நட்சத்திரம் அன்று இவருக்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் ஆகிய 5.வித எண்ணெய் தீபமான பஞ்ச தீபம் ஏற்றி வழிபட மனத்திற்கு பிடித்த வரன் அமைஉம். அலுவலகத்தில் மேலதிகாரியின் அடிமையாக செயல்புரியும் நிலை அகலும்.

நெல்லிமரபிள்ளையார்

பரணி நட்சத்திரம் அன்று இவருக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு 108 விளக்குகள் ஏற்றி ஏழைகளுக்கு இலவசமாக தங்களால் முடிந்த அளவு மருத்துவ உதவி செய்தால் இரும்பு தொழில் அமோகமாக நடைபெரும். பெண் குழந்தைகளுக்காக ஏங்குபவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும், மன சாந்தியும் கிட்டும்.

மாமரபிள்ளையார்

கேட்டை நட்சத்திரம் அன்று இந்த விநாயகருக்கு விபூதி காப்பிட்டு 3. ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உணவு, ஆடை, தானம் செய்ய பிறரின் பகைமை, பொறாமையால் பாதிக்கப்பட்ட வியாபாரம் மறுபடியும் சிறக்கும். விரக்தியால் உருவாகும் தற்கொலை மனப்பான்மை தணிந்து வாழ்வில் உறுதி ஏற்படும்.

நாவல்மரபிள்ளையார்

இவர் வடக்கு நோக்கி இருப்பது விசேஷம், ரோகிணி நட்சத்திரம் அன்று புனித நதிக்கரையில் ஏழைச் சிறுவர்களுக்கு வெண்ணெய் தானம் அளித்து இவரை வழிப்பட்டுவர பிரிந்த தம்பதியினர் குடும்பங்கள், உறவுகள் ஒன்று சேருவர்.

புன்னைமரபிள்ளையார்

ஆயில்யம் நட்சத்திரம் அன்று இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்வதோடு, ஏழை நோயாளிகளுக்கு ஆடை தானம் செய்தால் கணவன்-மனைவி இடையே உள்ள மனக்கசப்புகள் நீங்கும், தாம்பத்திய வாழ்க்கை வளமாகும்.

இலுப்பைமரபிள்ளையார்

ரேவதி நட்சத்திரம் அன்றும், செவ்வாய்க்கிழமைகளிலும் இவருக்கு பசு நெய்யை கொண்டு தீபம் ஏற்றி, மஞ்சள் நிற ஆஐகளை 10. வயதிற்கு உட்பட்ட சிறுமியர்களுக்கு அளித்துவர, தனித்து வாழும் முதியவர்கள், பெண்களுக்கு தற்காப்பு சக்தி கிடைக்கும், மிக உயர்ந்த கட்டிடம் கட்டுபவர்கள் எந்தவித ஆபத்து,விபத்துகள் இன்றி நஷ்டம் இன்றி அதை கட்டி முடிக்க முடியும்.

மகிழமரபிள்ளையார்

அரிய விநாயகரான இவரை அனுஷம் நட்சத்திரம் அன்று மாதுளம் பழ முத்துகளால் அபிஷேகம் செய்து வர ராணுவம், வெளிநாகளில் உள்ளோர் நலமாக இருப்பார்கள். ராணுவத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பான வாழ்வை பெறுவார்கள்.

சந்தனமரபிள்ளையார்

மிக மிக அபூர்வ விநாயகரான இவருக்கு சதுர்த்தி சதுர்த்தசி திதிகளில் பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட அரிய – அபூர்வ சாதனைகளை நிகழ்த்தும் வலிமை கிடைக்கும், புதியதாக ஆரம்பிக்கும் வியாபாரம் அமோகமாக நடைபெரும்…

தொகுப்பு: காசி விஸ்வநாதன், திருநெல்வேலி-

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *