• May 9, 2024

சிவ அபிஷேகமும்… பலன்களும்…

 சிவ அபிஷேகமும்… பலன்களும்…

பொதுவாகவே அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் நடைபெற்றாலும், எம்பெருமான் சிவனுக்கு நடைபெறும் அபிஷேகங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது. சிவன் ஒரு அபிஷேகப் பிரியர் என்றும் கூறுவர். காரணம் முக்கண் முதல்வனாகும் சிவனின் நெற்றிக்கண், தீப்பிழம்பாக உஷ்ணத்தை அளிக்கும்.

அந்தச் சூட்டைத் தணித்து அவருக்கு குளிர்ச்சி ஊட்டவே சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு மேலாக ஒரு செம்பு பாத்திரத்தைக் கட்டி, அதனுள் குளிர்ச்சியான நீர், பன்னீர், நெய், இளநீர் போன்றவற்றை நிரப்பி, அதன் அடியில் சிறு துளைகளிட்டு அதன் வழியே சொட்டு சொட்டாக விழும்படி அமைப்பார்கள். சொட்டு சொட்டாக விழும் நீர், சிவனை குளிர்விக்கும் என்பது ஐதீகம்.

சிவபெருமான் அபிஷேக பிரியர். சிவபெருமானுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

*அருகம்புல் சாறு கொண்டு சிவனை அபிஷேகித்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.

*பசும் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

*தயிரால் ஈசனை அபிஷேகித்தால் உடல் பலம், ஆரோக்கியம் பெறுவீர்கள்.

*பசு நெய்யால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வரியம் சேரும்.

*கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் தன விருத்தி ஏற்படும்.

*தேன் கொண்டு அபிஷேகித்தால் தேகம் பொலிவு பெறும்.

*மிருதுவான சர்க்கரையைக் கொண்டு அபிஷேகம் செய்தால் துக்கம் விலகும்.

*புஷ்பங்களைக் கொண்டு அபிஷேகம் செய்தால் பூலோக பாவம் அகலும்.

*இளநீரால் ஈசனை அபிஷேகித்தால், சகல சம்பத்துகளும் வாய்க்கப்பெறுவீர்கள்.

*ருத்திராட்சம் கொண்டு அபிஷேகம் செய்தால் ஆனந்த வாழ்வு அமையும்.

*அரைத்து எடுத்த சந்தனத்தால் அபிஷேகித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

*சுத்தமான நீரினால் ஈசனை அபிஷேகம் செய்தால் இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

*வில்வத்தால் அபிஷேகம் செய்தால் போக பாக்கியங்கள் வந்து சேரும்.

*அன்னத்தால் அபிஷேகித்தால் அதிகாரம், தீர்க்காயுள், மோட்சம் கிடைக்கும்.

*திராட்சைச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

*பேரீச்சம்பழம் கொண்டு அபிஷேகம் செய்தால் எதிரிகள் விலகுவார்கள்.

*மாம்பழத்தால் அபிஷேகித்தால் தீராத வியாதிகள் நீங்கும்.

*மஞ்சள் கலந்த நீரினால் அபிஷேகம் செய்தால் மங்கலம் உண்டாகும்

தொகுப்பு: காசி விஸ்வநாதன், திருநெல்வேலி-

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *