கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நாட்டின் சகோதரத்துவத்தை சீர்குலைக்கும், சிறுபான்மை இஸ்லாமிய மக்களை துன்புறுத்தும் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்தது.
ஒன்றிய மார்க்சிஸ்ட் செயலாளர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார்.. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். எட்டயபுரம் தாலுகா செயலாளர் ஜீவராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி,மணி,ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் தினேஷ்குமார்,கோவில்பட்டி ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
